வெள்ளி, 19 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (15:39 IST)

ரபேல் ஊழலில் தண்டனை நிச்சயம்: ஏன் ம்மா.. பிரேமலதா தெரிஞ்சுதான் பேசுறீங்களா...?

ரபேல் ஊழலில் தண்டனை நிச்சயம்: ஏன் ம்மா.. பிரேமலதா தெரிஞ்சுதான் பேசுறீங்களா...?
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த், உப்பு தின்னவன் தண்ணி குடிக்கதான் வேணும் என விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மதுரை விமான நிலையில் அவர் கூறியதாவது, ரபேல் விமான ஊழல் குறித்து மத்திய அரசு மீது கூறப்பட்டும் குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் தண்டனை நிச்சயம். ஆனால், ஆதாரமற்ற குற்றாச்சாட்டுகளை வைத்து எதுவும் சொல்ல முடியாது. 
 
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதி இடைத்தேர்தல் தாமதமாக அறிவிகக்ப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை பிரச்சாரத்தில் அனைவரும் எதிர்ப்பார்க்கின்றனர். இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். 
ரபேல் ஊழலில் தண்டனை நிச்சயம்: ஏன் ம்மா.. பிரேமலதா தெரிஞ்சுதான் பேசுறீங்களா...?
வருமான வரித்துறை ரெய்ட் என்பது அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்படுகிரது. பல இடங்களில் நடந்த சோதனையில் தகவல் உண்மை என தெரிகிறது. உப்பு தின்னவன் தண்ணி குடிக்கதான் வேணும். 
 
தமிழக தேர்தல் நிலவரம், நன்றாக உள்ளது. 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறேன். பிரதமர் மோடியுடன் பிரச்சாரத்தில் பங்கேற்கிறேன் எனவும் கூறியுள்ளார்.