1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (21:22 IST)

பாமக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்: தருமபுரியில் மீண்டும் அன்புமணி

அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக இடம்பிடித்த பாமக, அக்கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை பெற்றது. இந்த நிலையில் பாமகவுக்கு அதிமுக கூட்டணியில் தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு தொகுதிகளை ஒதுக்கியது
 
இந்த நிலையில் இந்த ஏழு தொகுதிகளில் தற்போது ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக தலைவர் ஜிகே மணி வெளியிட்டுள்ளார். மீதி இரண்டு தொகுதி வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று பாமக வட்டாரங்கள் கூறுகின்றன.  தருமபுரி தொகுதியில் மீண்டும் பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி போட்டியிடுகின்றார்.
 
பாமக போட்டியிடும் ஐந்து தொகுதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இதோ:
 
1. தருமபுரி: அன்புமணி ராமதாஸ்
 
2. விழுப்புரம்: வடிவேல் ராவணன்
 
3. கடலூர்: இரா.கோவிந்தசாமி
 
4. அரக்கோணம்: ஏ.கே.மூர்த்தி
 
5. மத்திய சென்னை: முனைவர் சாம் பால்
 
இவர்களில் முனைவர் சாம் பால் என்பவர் சென்னையின் பிரபல தொழிலதிபர் என்பதும், இவர் பாமகவில் இருக்கின்றார் என்பதே இந்த வேட்பாளர் பட்டியல் வந்தபின்னர் தான் பலருக்கு தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.