ஆதார வச்சிகிட்டு 50 லட்சம் கடன் கொடுங்க; வங்கியை திணறடித்த வேட்பாளர்

Last Updated: புதன், 3 ஏப்ரல் 2019 (11:35 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். 
 
இந்த தேர்தலில் வேட்பாளர்களில் அலப்பறைகளை தாங்க முடியவில்லை. ஆம், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவுக்கு பணம் இல்லை என தனது ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டை அடமானமாக வைத்துக்கொண்டு கடன் கொடுக்குமாறு வங்கியில் மனு அளித்து திணறடித்துள்ளார். 
 
நாமக்கலில் அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் செலவுக்கு பணம் இல்லை என,  தனது ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டை அடமானமாக வைத்து ரூ.50 லட்சம் கடன் வழங்க கோரி பாரத ஸ்டேட் வங்கியில் மனு அளித்துள்ளார். 

 
இது குறித்து அவர் கூறுகையில், தேர்தல் செலவுக்கு பணம் இல்லை. அதனால் கடன் வழங்குமாறு வங்கியில் கேட்டுள்ளேன். வங்கி மேலாளர் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என கூறினார். 
 
ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டை அடமானம் வைத்து கடன் வாங்க ரமேஷ் தேச தந்தை காந்தி வேடமிட்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :