வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2019 (14:58 IST)

ரவுண்டுகட்டி அடிக்கும் ஐடி: துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை!!!

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 8:30 வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. 
 
சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அதில் ’என் மகன் கதிர் ஆனந்தின் தேர்தல் வெற்றியை திசை திருப்பவே இந்த ஐடி சோதனை’ என்றார்.
இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை துரைமுருகன் திட்டவட்டமாக மறுத்தார். இன்று மீண்டும் வருமான வரி சோதனைகள் நடைபெற்றது.

வேலூரில் உள்ள திமுக பிரமுகர் மற்றும் துரைமுருகனின் நண்பரும் ஒருவருக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் இருந்து மூட்டை மூட்டையாக  பணம் சிக்கியது. பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  தேர்தல் நேரத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைகளால் பிரச்சாரத்திற்கு சரிவர செல்ல முடிவதில்லை, எனவே அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் துரைமுருகன் வீட்டில் வருமானவரி துறை சோதனை நடத்தி வருவதால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.