செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. பரபரப்பு சம்பவம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (13:02 IST)

அதிமுகவின் சதியை வெட்ட வெளிச்சாமாக்கிய அமைச்சர்!

வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக சதி திட்டம் தீட்டியுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு. 

 
நாளை தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் தற்போது வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டி போடுவதால் அந்த கட்சியின் பலம் என்ன என்பது இந்த தேர்தலின் முடிவுகள் தெரியும். 
 
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக சதி என்று அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். ஒரு வார்டுக்கு 100 பேர் வீதம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் நடந்த ரகசிய கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட திட்டம் வகுக்கப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.