செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (00:49 IST)

நேசிப்பிற்கு உகந்த புத்தக பிரியர்கள் - சிறப்புக் கட்டுரை

books
உலகத்திலுள்ள அரிய கண்டுபிடிப்புகளில் மகத்தானது இந்தப் புத்தகங்கள். உலகின் முதல் புத்தகம் சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு சுமேரிய நாகரிகக் காலத்தில் இருந்ததாக ஆராய்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். அந்தப் புத்தகம் களிமண்ணால் செய்யட்டதாக இருந்ததாகவும், அதன்பெயர் டேப்லெட் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
 
இந்தப் புத்தகங்களில் அரியப்பெரும் பொக்கிஷமாகக் கருதப்படும் சுமார் 3,500 ஆண்டுகள் பழமையான உலகின் முதல் காவியமான கில்காமேஷ் இன்றைய  ஈராக்கை உள்ளடக்கிய பகுதிகளில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
இந்த புத்தகங்களின் அபரிமிதமான வளர்ச்சியென்பது, ஜெர்மனியில் குண்டன்பெர்க் அச்சு இயந்திரத்தக் கண்டுபிடித்தற்குப் பின்னர் உலகமெங்கும் பெருகியது.
 
கிரிஸ்தவ மதத்தைப் பரப்புதற்கென்று கிழக்கிந்திய கம்பெனியின் சார்பில் முதலில் இந்தியா உள்ளிட்ட தங்கள் காலனி  நாடுகளில் ஊடுருவிய பிரிட்டிஷாரின் வருகையால்  இந்தக் கல்வியும் பரப்பப்பட்டது. குறிப்பிட்ட பிரிவினைச் சேர்ந்வர்க்கென்று இருந்த இந்தக் கல்வி மற்றும் கற்றலை எல்லோருக்குமானதாக மாற்றினர். இதன் மூலம் அதிகம் பயனடைந்தது ஏழை எளிய மக்கள்தான்.  
 
தமிழகத்தில் உலகின் முதல் பைபிள் சீசன் பால்குவால் அச்சடிக்கப்பட்டது.  சீமண்ணெய் ஊற்றிய விளக்கில் இரவெல்லாம் படித்துப் படித்து, கடவுளின் திருவடியில் தவமிருந்து,  தான் மெத்தப் படித்த புலமையைச் சுருக்கி, எளிதான வாக்கியத்தில் மக்களுக்குப் புரியும் பிரசுரிப்பதற்கான வித்தையை இந்த மத நூல்களை இயற்றியவர்களுக்குத்தான் வாய்த்திருக்க வேண்டும்.
 
கடவுளையே கதியென்று நம்பியிருந்தவர்களின் காதில் கடவுளின் திருவாக்கு ஒலித்து அது ஒலிவடித்தில் இருந்து எழுத்துருவாக ஆக எத்தனை  நாட்கள் எத்தனை ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்?
 
அது மக்களைச் சென்றடைய எத்தகைய உழைப்பை அவர்கள் செய்திருக்க வேண்டும். நோக்கம் என்னவோ மதத்தைப் பரப்புவதற்கானதாக இருந்தாலும், அதன் மூலம் எழுத்தறிவில்லாத மக்கள் இலக்கணச்சுத்தாமாகத் தெரிந்துகொள்ளவில்லை என்றாலும் எழுத்துக்கூட்டி எழுதிப் பேசிப் பழகவும், உலக விஷயார்த்தங்களைப் புரிந்துகொள்ள முடியாத காலத்திலும், ஏதேனும் ஒன்றைப் பற்றிப் புரிந்துகொள்ள இந்தப் புத்தககளின் பயன் இன்றியமையாததாக இருந்திருக்க வேண்டும்?
 
எத்தனையோ மாற்றங்களை இந்தக் காலமும், கல்வியும் உலக மக்களுக்குக் கொடுத்திறைத்திருக்கிறது.
 
இறைவனை அடைவதற்காக இயற்றப்பட்ட புத்தகங்களினூடாக மக்களுக்குக் கல்வி புகப்பட்டதும், ஒரு சலுகைக்காகவும் துயரிலிருந்து விடுபடுதற்காகவும் குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றியதும் ஒரு விபத்தான இருந்தாலும் அந்த விபத்தில் இருந்து ஒரு வாழ்க்கையின் மாற்றத்திற்கும், அவர்களின் சந்ததிகள் படித்தவர்களாக மாறுவதற்குமான ஒரு வாய்ப்பை அந்தக்  தந்திருக்கிறதல்லவா?
 
இங்கிலாந்து  பேரரசி விக்டோரியா மகாராணியின் பேரன் இந்தோனேஷியாவில் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென்ற ராணியின் கட்டளையை ஏற்று, அவர் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
 
அப்போது, அவரது செலவுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படும்போது, அவர் தன் பாட்டி விக்டோரியாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
 
இப்படி, பேரனுக்குத் தேவைப்படும் போதெல்லாம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தால், அவன் பிற்காலத்தில் சிறந்த தலைமையை எப்படிபெறுவான்? இருப்பதைக்கொண்டு சமாளித்து வந்தால்தானே அவன் நாளை இந்த நாட்டை ஆளுவதற்கான ஆளுமையைப் பெறமுடியும்! அதற்கு முதலில் தேவையைக் குறைத்து தன்னை தானே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்! இதை எப்படி பேரனுக்குச் சொல்வது? அவனைப் போல்தானே மற்றவர்களும் பணியாற்றி வருகிறார்கள்…. தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வற்காகப் பேரனை போர்களத்திற்கு அனுப்பி ராணுவப் பயிற்சிபெற அனுப்பினால், அவன் உல்லாசமாக இருப்பதற்காக இப்படி செலவுக்குப் பணம் அனுப்பும்படி கேட்கிறானோ? அவன் எதிர்க்காலம் என்னாகும்? என   நொடிக்கு நூறுமுறை சிந்தித்துப பேரனைக் குறித்துக் கவலைப் பட்டிருக்கிறாள் மாகாராணி.
 
ஒருவேளை பணம் அனுப்பினாள் பேரன் கெட்டுப்போய்விடுவான்! பணம் அனுப்பவில்லை என்றால் இத்தனை சாம்ராஜ்ஜியம், சூரியன் மறையாக நாடு என்ற பெருமையெல்லாம் வெறும் வார்த்தையாகிவிடுவதுபோல் அவன் தவித்திருப்பானோ? என்று புலம்புகிறாள் மகாராணி!
 
இதைப்பற்றி பேரனுக்கே ஒரு கடிதம் எழுதிவிட்டாள், அதில் தன் நிலைமைக் கூறினாள்..இப்படியே பேரனுக்குக் கடிதம் எழுதிக் கொண்டே வருகிறாள். ஆனால், தன் பேரனிடம் இருந்து பதில் கடிதமே வரவில்லை என்பதால் மகாராணி கவலையுறுகிறாள்.
 
ஒரு நாள் பேரனிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதை ஆசையும் ஆர்வமுமாக கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறாள்…
 
பாட்டி நீங்கள் எனக்குப் பணமே அனுப்ப வேண்டாம்! என்றிருந்தது அந்தக் கடித்தத்தில், ஒரு வேளை தன் மனதைப் புரிந்துகொள்ளாமல் பேரன் தன் மேல் கோபித்துக் கொண்டானோ என்று மனம் பிசைகிறாள்…அதற்குக் கீழ், பாட்டி,  நீங்கள் எனக்குப் பணம் அனுப்பாததை  நினைத்துக் கவலைப் படவேண்டாம்! நீங்கள் அனுப்பிய கடிதங்கள் என்னிடம் உள்ளதால், மகாராணியார் எழுதிய கடிதம் இதென்று கூறினால்  இதை வாங்குவதற்கு ஆளா இல்லை…? அதனால் இந்தக் கடிதங்களை ஏலத்தில்விட்டு,  என் செலவுகளைச் சமாளித்துக் கொள்கிறேன். உங்கள் மனதையும் நான் புரிந்து கொண்டேன்! எனக்காக ஒரு உதவி மட்டும் செய்யுங்கள்- இந்தக் கடிதம் எழுதுவதை மட்டும்  நிறுத்தாதீர்கள் என்று அதில் எழுதியிருந்தார்.
 
இதைப் படித்துப் பார்த்து மகாராணியின் மனம் பெருமையில் பூத்தது. பேரனின் சாமர்த்தியத்தைக் கண்டு அகமகிழ்ந்தாள்.
 
இந்த பேரரசியார்தான் காலையில் எழுந்து திருக்குள் படிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர். அறத்தை வலியுறுத்தும் குறளைத் தன் பேரனுக்கும் தன் குரல் வழிக் கத்தும் தகுதியைப் பெற அப்புத்தகங்கள் தானே வலியுறுத்தியிருக்கும்.
 
தன் ஆயுட்காலம் முழுவதும் எழுதிக் குவித்த மஹாத்மா காந்தியின் வாழ்க்கைப் பாதித்த புத்தகங்களான டால்ஸ்டாயின் போரும் அமைதியும், ரஸ்கினின் கடையனும் கடைத்தேறல் அவரது ஒரு முழுச் சத்தியாகிரகியாக தென்னப்பிரிக்காவுக்குத் தயார்படுத்தி, இந்தியாவில் அரை நூற்றாண்டுச் சுந்திரப் போராட்டத்திற்கு அவரை மனதால் ஆயத்தப்படுத்தியது.
 
ஒருவரின் மனச்சாட்சியோடு பேசும் ரஸ்யாவின் மாபெரும் எழுத்து மேதை தாஸ்தாயேஸ்கியின் படைப்புகள்.
 
செக்காவின் பல்திறமுடைய சிறுகதைகள்.
 
தாகூரின் தெய்வாதீனமும்  மனித நேயமிக்மும்  கவிதைகள்; கட்டுரைகள்; சிறுகதைகள் மற்றும் நாவல்கள்.
 
ஆர்.கே,. நாராயணனின் இந்திய பண்பாட்டை எதிரொலிக்கும் கதைகள்.
ஐரோப்பாவிலும் ஆங்கில இலக்கத்தை உலகெங்கும் வியாபிக்கச் செய்த மகாகவி ஷேக்ஸ்பியர், பெனாட்ஷா, வோர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ் போன்றோரின் படைப்புகள். இதேபோல் உலகிலுள்ள ஒவ்வொரு மொழிகளிலுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் எல்லாம் எல்லா மொழிகளிலும் பெயர்க்கும் போது, அது பன்மொழிக் கலாச்சார தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும்.அது வாழ்க்கையிலும் சொல்லியும் செயலிலும் பிரதிபலிக்கும்.
 
இந்தியாவில், ஒவ்வொரு மொழிகளிலுமுள்ள தலைசிறந்த  படைப்பாளிகள், எழுத்தாளுமைகள், கவிஞர்கள், படைப்புகளும் மகத்தானவை,. இவை இளைஞர்களின் மனதை ஆக்கிரமிக்க வேண்டும்.
 
இன்றைய காலத்தில் சமூக வலைதளங்கள் மலிந்துள்ளதால், குண்டர்பெர்க் லைரரி, தமிழ் டிஜிட்டல் பைபரரி,  காங்கிரஸ் லைபரி என்ற உலகப்புகழ்பெற்ற லைபரிகள் நூலகங்கலில் எண்ணிடலங்கா நூல்கள் உள்ளன.
 
அன்றைய காலம் மாதிரி தேடித்திரிந்து அலைமோதி நூல்களை யாராவது எடுத்துச் சென்றிருப்பார்களா என நெஞ்சில் அடித்துக் கொண்டு பதற வேண்டாம். ஓரிடத்தில் இருந்துகொண்டு ஒரு சொடுக்கில் உரிய சந்தா செலுத்தி அதைப் பயன்படுத்திக் கொண்டு எப்போதும் படித்துச் சுவைக்க ஏராளமான வசதிகளுண்டு.
 
குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச்சிறந்த பரிசு புத்தகங்கள் தான் என வின்ஸ்டன்ட் சர்ச்சில் கூறினார். புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்கள் என்றா லெனின்.
 
இந்தப் புத்தகம் எனும் மரத்தின் கீழ் அமர்ந்து, அது தரும் வாசிப்பு எனும்  நிழலை நம் அறிவால் துய்ப்போம். இதைவிட இந்தப் புத்தகங்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிக்கடன் வேறில்லை.