1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.லெனின் அகத்தியநாடன்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 19 ஏப்ரல் 2016 (17:02 IST)

நீடிக்குமா விஜயகாந்தின் வெற்றி; என்னவாகும் அரசியல் எதிர்காலம்?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் உளுந்தூர்பேட்டையில் மூன்றாவது முறையாக களம் காணுகிறார்.
 

 
150 மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து சினிமா கோலாச்சிய விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்திற்குப் பிறகு, அவரது ரசிகர்களாலும் சினிமா துறையினராலும் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படும் விஜயகாந்த் அரசியலில் முக்கியமான கட்டத்தை அடைந்திருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருதிகிறார்கள்.
 
தமிழகத்தின் ’பி’ மற்றும் ‘சி’ செண்டர்கள் தனிப்பெரும் ராஜாவாக விளங்கியவர் விஜயகாந்த். இன்னும் சொல்லப்போனால், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும்விட கிராமப்புறங்களில் அதிகப்படியான ரசிகர் மன்றத்தை கொண்டிருந்தவர் விஜயகாந்த்.
 
பல திரைப்படங்களில் தனது அரசியல் முகத்தை வெளிப்படுத்தி வந்த, ரசிகர்களின் பேராதரவோடு, 2005ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ‘தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடக்கினர்.
 
பின்னர், அடுத்த ஆண்டே அதாவது 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார். தமிழகத்தின் மொத்தமுள்ள 234 தொகுதி சட்டமன்ற தொகுதிகளில், 232 தொகுதிகளில் தனித்து தேமுதிக போட்டியிட்டது.
 
இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தவிர மற்றவர்கள் அனைவரும் தோல்வியை தழுவினர். விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக நுழைந்தார்.
 
ஆனால், அனைவரும் வியக்கும் வகையில் தேமுதிக மொத்தம் 8.45 சதவீத வாக்குகளைப் பெற்றது. 3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் 2006 தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.
 

 
இதனால், விஜயகாந்தை ஒரு புதிய வரவாக அரசியலில் பார்க்கப்பட்டது. அதற்கு, அவர் ’தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி’ என்று முழங்கியதும் ஒரு காரணம்.
 
இதனை தொடர்ந்து 2009ஆம் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும், தேமுதிக யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்டது. போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவினாலும் 10% வாக்குகள் அவரது கட்சிக்கு கிடைத்தது மேலும் அவரது செல்வாக்கை உயர்த்தியது.
 
இத்தகைய சூழலில் இப்படிப்பட்ட சூழலில். 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி முதல்முறையாக கூட்டணி வைத்து தேர்தலை தேமுதிக சந்தித்தது. மொத்தம் போட்டியிட்ட 41 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக 23 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
 
இதனால், இரண்டாவது பெரும்பாண்மையுடன் தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது. அதே நேரம் தேமுதிகவிற்கு 2006 இல் பெற்றதை விட அந்த தேர்தலில் 0.5 விழுக்காடு வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தது.
 
பின்னர், அதிமுகவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தனியாகவும், திமுக ஒரு அணியாகவும் மூன்றாவது அணியாக தேமுதிக தலைமையில், பாஜக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டது.
 
இந்த தேர்தலில் பாமக மட்டுமே ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. தேமுதிக போட்டியிட்ட 14 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது. அதே சமயம் வாக்கு சதவீதமும் 5.1 ஆக குறைந்தது.
 

 
இந்நிலையில், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு பலமுறை பகிரங்கமாக அழைப்பு விடுத்தபோதும் விஜயகாந்த் அனைத்தையும் நிராகரித்தார்.
 
விஜயகாந்த் தேசிய அளிவில் இந்த தேர்தலில் பார்க்கப்பட்டார். அவரது கூட்டணி குறித்து தேசிய இதழ்கள் முக்கியத்துவம் அளித்து விவாதித்து வந்தன. தமிழக வரலாற்றில் இந்த சட்டமன்ற தேர்தல் புது மாதிரியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், மூன்றுக்கும் மேற்பட்ட அணிகள் போட்டியிடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூன்றாவது முறையாக உளுந்தூர்பேட்டையில் கணம் காணுகிறார். பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்துள்ள தேமுதிகவிற்கு இது முக்கிய தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால், விஜயகாந்த் என்ற முழக்கம் முடிந்து போய்விட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.