1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Geetha Priya
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (11:10 IST)

உச்சத்தின் மகளை கலாய்த்த மருமகன்

அன்எம்ப்ளாயி படத்தில் நடிகர் பொடி வைத்து பேசியிருக்கும் வசனங்களையும், காட்சிகளையும் குறித்துதான் இப்போது கோடம்பாக்கம் பேசிக் கொண்டிருக்கிறது. உச்சத்தின் மருமகனான இவர் அவரது இளைய மகளை இந்தப் படத்தில் கிண்டலடித்திருப்பதாக செய்தி.

படத்தில் அவர் அடிக்கடி அமுல்பேபி என்று கிண்டல் செய்யும் வில்லனுக்கு இளைய மகளின் கணவரின் பெயரை வைத்திருக்கிறார். அதேபோல், உன் பெயருக்குப் பின்னால் உள்ள உன் அப்பா பெயரை எடுத்துவிட்டால் நீ ஒண்ணுமேயில்லை என்பது உச்சத்தின் இளைய மகள் மீதான நேரடி கமெண்ட் என்கிறார்கள். 
 
இந்த கான்ட்ரவர்ஸியை மனதில் வைத்து படத்தைப் பார்த்தால் படம் பலவித அர்த்தபுஷ்டியோடு சுவாரஸியமாக இருக்கும்.
 
நீங்க என்ன சொல்றீங்க?