Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அட பாவமே! உச்ச நடிகருக்கு இப்படி ஒரு சோதனையா?


Cauveri Manickam| Last Updated: திங்கள், 17 ஏப்ரல் 2017 (17:22 IST)
உச்ச நடிகரின் மருமகனான ஒல்லி நடிகர் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்தை, உச்ச நடிகரின் மூத்த மகள் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளாராம். அதற்கு தந்தையின் நண்பரான பிரபல உயர நடிகரிடம் பேச சொல்லி இருக்காராம்.

 

 
உச்ச நடிகரின் மருமகனான ஒல்லி நடிகர் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்தை, ஊர் உலகமே கொண்டாடி வருகிறது. உச்ச நட்சத்திரமும் படத்தைப் பார்த்து அசந்து போனாராம். அத்துடன், அக்கட தேசத்தில் இருக்கும் தன் நண்பருக்கும் படத்தைக் காட்டி, ‘தெலுங்கில் ரீமேக் செய்யலாம்… நீங்களே நடிங்க’ என்றாராம். அவரும் ஓகே சொல்ல, தன்னுடைய மருமகனையே அந்தப் படத்தை இயக்கச் சொன்னாராம்.
 
இதைக் கேள்விப்பட்ட உச்ச நடிகரின் முதல் மகளுக்கு, அதாவது ஒல்லி நடிகரின் மனைவிக்கு ஒரு ஆசை வந்ததாம். தமிழில் மூன்றாவது படத்தை இயக்கிவரும் அவர், தன் புருஷன் படத்தை ஹிந்தியில் தானே ரீமேக் பண்ணால் என்ன என்று யோசித்தாராம். இருக்கவே இருக்கிறார் அப்பாவின் நண்பரான அந்த உயர நடிகர். அவரை ராஜ்கிரண் கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என்பது அவரின் எண்ணம். இதை அப்பாவிடம் சொல்ல, கடைசிவரைக்கும் மகள்களுக்காகவே வாழ்ந்துவரும் உச்ச நடிகரிடம் இருந்து மறுப்பா வரும்? ‘பேசிப் பார்க்குறேன்மா’ என்று சொல்லியிருக்கிறார் உச்ச நடிகர்.


இதில் மேலும் படிக்கவும் :