Murugan|
Last Updated:
திங்கள், 8 மே 2017 (14:09 IST)
சமீபத்தில் வெளியான பிரம்மாண்ட படத்தில் வில்லனாக நடித்த நடிகருக்கும், இளவரசியாக நடித்த நடிகைக்கும் இடையே காதல் உருவாகியிருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த நடிகர் ஏற்கனவே, மூனுஷா நடிகையின் காதலர் லிஸ்டில் இருந்தவர். அதன்பின் இருவரும் பிரிந்தனர். தற்போது, பிரமாண்ட படத்தில் நடித்த நடிகையையும், நடிகரையும், ஆந்திராவில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அடிக்கடி பார்க்க முடிகிறதாம். நடிகைக்கு இதுதான் முதல் காதல் எனக்கூறப்படுகிறது.
படத்தில் அவருக்கு கிடைக்காத இளவரசி நடிகை, நிஜவாழ்க்கையிலாவது கிடைக்கட்டும் என சிரிக்கிறார்களாம் டோலிவுட் காரர்கள்...