Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பஞ்சாயத்தைக் கூட்டுவாரா வம்பு?

Cauveri Manickam| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (17:58 IST)
எழுதி வச்சதை எடுக்காம, எதிர்த்தாப்ல வந்ததையெல்லாம் இப்படித்தான் நடக்கும் போல. வம்பு நடிகரை வைத்து, மூணு ‘ஏ’ படம் எடுத்தார்கள் அல்லவா? அந்தப் படம்தான் வயசுக்கு வந்த பிள்ளை போல வளவளன்னு வளர்ந்து நிக்குதாம்.‘எதை வெட்டுவது? எதை ஒட்டுவது?’ என்று இயக்குநர் யோசிக்க, ‘பேசாம ரெண்டு பாகமா வெளியிட்டால் என்ன?’ என்று ஒல்லி நடிகருக்குப் போட்டியாக ஒரு யோசனையைச் சொல்லியிருக்கிறார் வம்பு. 
 
‘மாட்டுக்குத் தீனி போட்டால், கன்னுக்குட்டியும் சேர்ந்து கிடைக்குதே…’ என்று மகிழ்ந்து போயிருக்கிறார் தயாரிப்பாளர். வம்பு  சொன்னபடியே இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். இந்த இடத்தில்தான் ஒரு சிக்கல். ‘அவர் மட்டும் ரெண்டு தடவை ரிலீஸ் பண்ணி காசு பார்ப்பாரு, உங்களுக்கு ஒரு சம்பளம்தானா?’ என்று வம்புவுக்கு கொம்பு சீவி விட்டிருக்கிறார் அடிப்பொடிகள். எனவே, இன்னொரு படத்துக்கான சம்பளத்தைக் கேட்டு விரைவில் பஞ்சாயத்தைக்  கூட்டலாம் வம்பு நடிகர் என்கிறார்கள்.இதில் மேலும் படிக்கவும் :