Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அழுது புலம்பும் உச்ச நட்சத்திரத்தின் மகள்

Cauveri Manickam| Last Modified சனி, 20 மே 2017 (15:37 IST)
தன் கதையை இன்னொருவர் இயக்கியதுடன், தன் பெயரைக்கூட குறிப்பிடாததால் அழுது புலம்புகிறார் உச்ச நட்சத்திரத்தின்  மகள்.

 
உச்ச நட்சத்திரத்தின் மூத்த மகளான இவர், ஒல்லி நடிகரைத் திருமணம் செய்திருக்கிறார். இயக்குநரான இவர், தன் தந்தையான உச்ச நட்சத்திரத்தை இயக்குவதற்காக, ஒரு கதையைத் தயார் செய்து வைத்திருந்தார். அதை ஆட்டையைப் போட்ட ஒல்லி  நடிகர், பட்டி பார்த்து, பெயிண்ட் அடித்து, தான் இயக்குநராக அறிமுகமாகிவிட்டார்.
 
சமீபத்தில் வயதான ஒரு நடிகர் நடித்து ரிலீஸானதே… அந்தப் படம்தான். அந்தப் படத்துக்குக் கிடைக்கும் பாராட்டும், புகழும்…  நடிகைக்கு அழுகையை வரவழைக்கிறதாம். இதெல்லாம் தனக்குக் கிடைத்திருக்க வேண்டியதல்லவா என்று நினைத்து, மனசுக்குள்ளேயே மருகுகிறாராம்… என்னதான் புருஷன் – பொண்டாட்டியாக இருந்தாலும், வாயும் வயிறும் வேறுதானே? இத்தனைக்கும் கதை என்ற இடத்தில் கூட தன் மனைவி பெயரைப் போடாமல் காரியம் சாதித்திருக்கிறார் ஒல்லி நடிகர்.


இதில் மேலும் படிக்கவும் :