நடிகையின் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்த நடன இயக்குநர்

Cauveri Manickam (Sasi)| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (17:11 IST)
பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு இறக்குமதியாகியுள்ள நடிகையின் மனதில், நங்கூரமிட்டு அமர்ந்து விட்டாராம் நடன இயக்குநர்.

 
 
காட்டைப் பற்றிப் படமெடுத்தவர், தளபதியின் பெயரைக் கொண்ட இயக்குநர். இந்தப் படத்தில், பாலிவுட்டின் பிரபல நடிகரின் பேத்தி ஹீரோயினாக நடித்திருந்தார். இவரும் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இயக்குநருக்கு விவாகரத்து  ஆகிவிட்டதால், அவரையும், நடிகையையும் இணைத்து கிசுகிசு எழுந்தது.
 
இந்த நேரத்தில், டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான தாடிக்காரர் அந்தப் படத்தில் நடிகைக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்க, இருவருக்கும் இடையே பற்றிக் கொண்டதாம். மனைவியை விவாகரத்து செய்த தாடிக்காரர், பெரிய நம்பர் நடிகையுடன் காதலில் இருந்தவர்.
 
இப்போது இருவருக்கும் இடையில் ஏகப்பட்ட நெருக்கம் ஆகி, தாடிக்காரர் அடுத்து இயக்கும் படத்தில் நடிகையையே  ஹீரோயின் ஆக்கினார். ஆனாலும், தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநருக்கும், நடிகைக்கும் இடையில் ஒரு இது இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இயக்குநரின் கையில் ராக்கியைக் கட்டி, நடனத்திடம்தான் தான் நெருக்கமாக இருப்பதாக  உணர்த்திவிட்டாராம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :