இயக்குநருக்கு ஓகே சொல்வாரா தளபதி?

Cauveri Manickam| Last Modified செவ்வாய், 16 மே 2017 (15:41 IST)
தன்னை வைத்து பிளாப் கொடுத்த இயக்குநருக்கு, மறுபடியும் ஓகே சொல்வாரா தளபதி என்பதுதான் கோடம்பாக்கத்தின்  கேள்வியாக இருக்கிறது.

 
13 வருடங்களுக்கு முன்பு தளபதியை வைத்து கபடி படத்தை இயக்கியிருந்தார் பூமியின் பேர் கொண்ட இயக்குநர். சின்ன நம்பர்  நடிகை தான் தளபதிக்கு ஜோடி. அந்தப் படத்தில் வில்லன் நடிகர் பேசும் ‘செல்லம்… ஐ லவ் யூ’ டயலாக், இன்றளவும் பிரபலம். இந்தப் படம் ஹிட்டானதால், அடுத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநருக்கு அளித்தார் தளபதி. அதே  ஜோடியை வைத்து 2008ஆம் ஆண்டு பறவையின் பெயரில் படமெடுத்தார் இயக்குநர். அந்தப் படம் அட்டர் பிளாப்.
 
பிறகு, வம்பு நடிகரை வைத்து ஒரு படத்தை எடுத்தார் இயக்குநர். அந்தப் படமும் பெரிதாகப் போகவில்லை. இதனால், 6  வருடங்களாக எந்தப் படத்தையுமே இயக்காமல் இருப்பவருக்கு, கபடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் என்ன என்ற யோசனை தோன்றியிருக்கிறது. தன்னை வைத்து பிளாப் கொடுத்த இயக்குநருக்கு, மறுபடியும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் தளபதி. அந்தப் படம்தான் இந்த வருட தொடக்கத்தில் ரிலீஸானது. அதேபோல தனக்கும் வாய்ப்பு தருவார் என நினைக்கிறார்  இயக்குநர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :