புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (21:28 IST)

தல நடிகரின் அதிரடி முடிவு!!

தல நடிகருக்கு தோள்பட்டையில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதால், கொஞ்ச நாளைக்கு ஆக்‌ஷன் வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.


 
 
சமீபத்தில் வெளியான படத்தில் தல நடித்தபோது, தோள்பட்டையில் கடுமையான அடி. வலியைத் தாங்கிக்கொண்டு நடித்த தல நடிகருக்கு, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. 
 
அவர் நலம் என்றாலும், மூன்று மாதங்களுக்கு எந்த வேலையும் செய்யாமல் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டுள்ளார்களாம் மருத்துவர்கள்.
 
எனவே, மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் அடுத்த படத்துக்கான ஷூட்டிங் தொடங்கும். அந்தப் படத்தில், அதிகமான ஆக்‌ஷன் வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம் தல. 
 
மருத்துவர்களின் எச்சரிக்கைதான் இதற்கு காரணம். ஆக்‌ஷனுக்குப் பதில் செண்டிமெண்ட்டை அதிகம் சேர்க்கப் போகிறார்களாம்.