Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்வீட் ஸ்டால் நடிகையால் எரிச்சலாகும் சரும நடிகை

cauveri manickam| Last Modified புதன், 12 ஜூலை 2017 (17:58 IST)
ஸ்வீட் ஸ்டால் நடிகைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால், சருமப் பிரச்னை நடிகைக்கு ஏகப்பட்ட எரிச்சலாம்.
 ஒரு படத்தில் இரண்டு நடிகரோ அல்லது நடிகையோ நடித்தால்… ஒருவருக்கு அதிக முக்கியத்துவம், இன்னொருத்தருக்கு முக்கியத்துவம் இல்லை என்ற ரீதியில் பேச்சுகள் கிளம்பும். ஆனால், இரண்டு நடிகைகளுக்கு மட்டும் அடிக்கடி இந்தப் பிரச்னை கிளம்பினால்… ஸ்வீட் ஸ்டால் நடிகைக்கும், சரும நடிகைக்கும் அடிக்கடி இப்படித்தான் முட்டிக் கொள்கிறதாம்.

2010ஆம் ஆண்டு வெளியான ‘பிருந்தாவனம்’ தெலுங்குப் படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோதே இந்தப் பிரச்னை தொடங்கிவிட்டதாம். இதன் காரணமாகத்தான் ‘பிரமோத்சவம்’ தெலுங்குப் படத்தின் புரமோஷனின்போது, வேண்டுமென்றே தாமதமாக வந்திருக்கிறார் சரும நடிகை.
‘ஜனதா கேரேஜ்’ படத்தில் நடித்த சரும நடிகையிடம், அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய ஸ்வீட் ஸ்டால் நடிகை குறித்துக் கேட்டபோது, ‘ஒரு பாடலுக்கு ஆடிய ஐட்டம் டான்ஸரைப் பற்றி என்ன சொல்வது?’ என்று கேட்டிருக்கிறார்.

தற்போது நாகர்ஜுனாவின் ‘ராஜு கரி காதி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரும நடிகை. இந்தப் படத்தில், கெஸ்ட் ரோலைவிட கொஞ்சம் அதிக முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் ஸ்வீட் ஸ்டால் நடிகை நடிக்கிறார். இது, சரும நடிகைக்கு கடுப்பைக் கிளப்பியுள்ளது.

அத்துடன், ‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக இருவரும் நடித்துள்ளனர். அதில், ஸ்வீட் ஸ்டால் நடிகையின் போர்ஷன் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருப்பதால், அவர்மீது எக்கச்சக்க எரிச்சலில் இருக்கிறாராம் சருமப் பிரச்னை நடிகை.


இதில் மேலும் படிக்கவும் :