சினிமா இனி செட்டாகாது, வேற வேலைக்கு போறேன்: சிம்பு


sivalingam| Last Modified சனி, 8 ஜூலை 2017 (00:57 IST)
கோலிவுட் திரையுலகில் ஏதோ அரைகுறை வெற்றி படங்களை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொடுத்து கொண்டிருந்த சிம்புவை ஒரேயடியாய் திரையுலகில் இருந்து துரத்திய பெருமை ஆதிக் ரவிச்சந்திரனையே சேரும்.


 
 
'AAA' படத்தின் படுதோல்வி சிம்புவை ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டதாம். சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு செல்லாதது, சரியான கதையை தேர்வு செய்யாதது, ரசிகர்களை அணைத்து செயல்படாதது ஆகியவை காரணமாக தன்னுடைய மார்க்கெட் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டதை ரொம்பவே லேட்டாக உணர்ந்துள்ளாராம் சிம்பு
 
எனவே இனிமேல் நடிப்பதை விட்டுவிட்டு இயக்குனராக போகிறாராம். புதுமுகங்கள் நடிக்கும் படம் ஒன்றை சிம்பு இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை அவரது தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதிலாவது சிம்புவுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :