திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Murugan
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (13:13 IST)

கதையை விட்டு காசுக்கு மாறிய ரவுடி நடிகர்....

சம்பளத்தை பெரிதாக நினைக்க தொடங்கியுள்ளதால், நிறைய சினிமா வாய்ப்புகளை ரவுடி நகர் இழந்து வருவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


 

 
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேடிப் பிடித்து வந்த நடிகர் தற்போது தன்னை மாற்றிக்கொண்டாராம். ஆம்.. அதிக சம்பளம் தரும் தயாரிப்பாளர் படங்களில் அவர் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். அதனாலேயே பல பட வாய்ப்புகள் அவரை விட்டு போய்விடுவதாக கூறப்படுகிறது.
 
ஒல்லி நடிகர் நடிக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்திலிருந்து ரவுடி நடிகர் விலகியதற்கு காரணமும் சம்பளம்தான் எனக்கூறப்படுகிறது. 
 
இதனால் அதிருப்தியடைந்த கோடம்பாக்கம், நடிகர் சம்பளத்தில் கறார் காட்டாமல் மீண்டும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என விரும்புகிறார்களாம்.