Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரெய்டால் பிரச்னையில் மாட்டிக்கொண்ட நடிகர்

Cauveri Manickam| Last Modified புதன், 19 ஏப்ரல் 2017 (14:51 IST)
நாட்டாமை நடிகரின் வீட்டைத் தொடர்ந்து, அவரின் மனைவியான சித்தி நடிகையின் அலுவலகத்திலும் ஐ.டி. ரெய்டு  நடைபெற்றது. அதில், கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்,  அவர்கள் தயாரிக்கும் தமிழக முன்னாள் முதல்வர் பெயரைக் கொண்ட படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிற்கிறது.

 
 
அந்தப் படத்தில், இசையமைப்பாளராக இருந்து ஹீரோவான தளபதி பெயரைக் கொண்ட நடிகர்தான் நடித்து வருகிறார். படம் பாதியிலேயே நிற்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கிறார். 
 
காரணம், எதையும் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக, ஒரு நேரத்தில் ஒரு படத்துக்கு மட்டுமே கால்ஷீட் கொடுப்பது  அவருடைய வழக்கம். தற்போது இந்தப் படம் பாதியிலேயே நிற்பதால், கொடுத்த கால்ஷீட்டெல்லாம் வீணாப்போச்சே என்ற வருத்தத்தில் இருக்கிறாராம். எனவே, அரசியல் வாரிசு நடிகரின் மனைவி இருக்கும் ரஜினி படத்தின் தலைப்பைக் கொண்ட  படத்தில் அடுத்த மாதம் முதல் நடிக்கப் போகிறாராம்.


இதில் மேலும் படிக்கவும் :