Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

3 நாட்களுக்கு 30 கோடி! ரஜினிக்கு வலை விரித்த துணிக்கடை அதிபர்

Last Modified சனி, 20 ஜனவரி 2018 (04:19 IST)
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவின்போது துணிக்கடை அதிபர் ஒருவர் ரஜினியை தனியாக சந்தித்து பேசினாராம். முதலில் பொதுவான விஷயங்களை பேசிவிட்டு பின்னர் தன்னுடைய துணிக்கடை விளம்பரத்தில் நடிக்குமாறும், மூன்றே நாள் கால்ஷீட் கொடுத்தால் போதும், முப்பது கோடி சம்பளம் தருவதாகவும் அவர் கூறியிருக்கின்றார்

ஆனால் வழக்கமான தனது டிரேட்மார்க் சிரிப்பை உதிர்த்த ரஜினிகாந்த், நீங்கள் நூறு கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்' என்று கூறிவிட்டாராம். அதுதான் சூப்பர் ஸ்டார். கமல்ஹாசன் கூட ஒரு துணிக்கடை விளம்பரத்தில் சமீபத்தில் ரூ.10 கோடி சம்பளம் வாங்கி நடித்தார். ஆனால் ரஜினி தான் நடிக்க வந்ததில் இருந்து இன்று வரை எந்த விளம்பரத்திலும் தோன்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி வெளியானதில் இருந்து இப்படிப்பட்ட ஒருவரைத்தான் தேடிக்கொண்டிருந்தோம் என்று நெட்டிசன்கள் ரஜினிக்கு புகழ்மாலை சூட்டி வருகின்றனர். கட்சி ஆரம்பிக்கும் முன்னரே கருத்துக்கணிப்பில் 33 தொகுதிகளை ரஜினி கட்சி பெறும் என்று கூறப்பட்ட நிலையில் வரும் தேர்தலில் ரஜினியின் கட்சி நிச்சயம் தமிழகத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :