Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா நம்பர் நடிகை?

Last Modified வெள்ளி, 1 டிசம்பர் 2017 (19:40 IST)
பெரிய நம்பர் நடிகை, இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.நடிகையாகி 15 வருடங்கள் ஆனாலும், இன்றைக்கும் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார் பெரிய நம்பர் நடிகை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சமூகக் கருத்துள்ள படம், இவருடைய மார்க்கெட்டை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பொதுவாக, தான் நடிக்கும் எந்தப் படங்களின் புரமோஷனிலும் கலந்து கொள்ள மாட்டார் நம்பர் நடிகை. சமீபத்தில் வெளியான படத்திற்கு மட்டும், மூன்று தியேட்டர்களுக்கு விஸிட் அடித்து ஆச்சர்யப்படுத்தினார்.

இந்நிலையில், சிவ நடிகர் ஜோடியாக அவர் நடித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதிலாவது அவர் கலந்து கொள்வாரா இல்லை வழக்கம்போல டேக்கா கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :