Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகரின் மனைவியுடன் நமீதாவுக்கு அப்படி என்னதான் சண்டை?


sivalingam| Last Modified வெள்ளி, 16 ஜூன் 2017 (05:04 IST)
பிரபல மலையாள நடிகர் திலீப் மனைவி காவ்யா திலீப்புக்கும் நடிகை நமிதா பிரமோத்துக்கும் சண்டை என மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 


சமீபத்தில் திலீப் ஷோ 2017 என்ற ஷோ அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த ஷோவுக்கு நடிகர் திலீப்பின் மனைவி காவ்யாவும் வந்திருந்தார். அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் திலீப் ரிகர்சல் பார்க்கும் போது கூடவே இருந்தார். இதனால் அவருடன் டான்ஸ் ஆடிய நமிதாவுக்கு தர்மசங்கடமாக இருந்ததாம். திலீப்புடன் நெருங்கி ஆடும்போது காவ்யா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் திரும்பி வந்ததும் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு இந்த ஷோ குறித்து பேட்டியளித்த நமிதா, 'அமெரிக்க நிகழ்ச்சியில் சிலரின் நல்லது மற்றும் கெட்டதை பார்த்தேன் என்று ந பேட்டி அளித்தார். இதில் கெட்டது என்பது காவ்யா தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

இதற்கு விளக்கம் அளித்த நமிதா, 'தனக்கும், காவ்யா மாதவனுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. தான் கூறியதை திரித்து செய்தி வெளியிட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :