Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

போட்டியில்லாமல் வளரும் ஒல்லி நடிகர்

cauveri manickam| Last Modified புதன், 12 ஜூலை 2017 (17:15 IST)
ஒல்லி நடிகர், எந்தப் போட்டியுமே இல்லாமல் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. 
பாகவதர் காலத்தில் இருந்தே ஒருவரை மற்றொருவருடன் போட்டியாளராக ஒப்பிடும் பழக்கம், ரஜினி – கமல், விஜய் – அஜித் என தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில், ஒல்லி நடிகருக்கும், வம்பு நடிகருக்கும் போட்டி. ஆனால், கிட்டத்தட்ட வம்புவின் கெரியரே காலியான நிலையில், ஒல்லி நடிகர் மட்டுமே தாக்குப் பிடித்து நிற்கிறார்.

அதுவும், நடிகராக அறிமுகமான ஒல்லி, பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல படிகளைக் கடந்து வளர்ந்து நிற்கிறார். அத்துடன், ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களின் டிரெய்லருக்கு மட்டுமே கிடைத்துவந்த சாதனை, தற்போது ஒல்லியும் எட்டிப் பிடிக்கும் இடத்தில் இருக்கிறது.

அவர்களின் டிரெய்லர் தான் ஒரு கோடி பார்வையாளர்களைத் தாண்டும். ஆனால், முதன்முறையாக ஒல்லியின் இரண்டாம் பாகம் டிரெய்லர், 90 லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. இது யூ டியூபில் மட்டுமே. ஃபேஸ்புக்கில் 50 லட்சம் பார்வையாளர்கள், தெலுங்கு டிரெய்லர் 56 லட்சம் பார்வையாளர்கள் என கணக்கு ஏறிக்கொண்டே போகிறது


இதில் மேலும் படிக்கவும் :