Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மதுரையில் 100, உலகம் முழுவதும் 1000: சிம்புவின் பில்டப் எடுபடுமா?


sivalingam| Last Updated: புதன், 21 ஜூன் 2017 (18:31 IST)
சிம்பு நடித்த படம் ஒன்று சக்சஸ் ஆவது என்பது குறிஞ்சிப்பூ மாதிரி எப்போதாவது நடைபெறும் அதிசயம் தான். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் நடித்தே அவரால் வெற்றிப்படம் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.


 


மதுரையில் உள்ள சிம்பு ரசிகர்கள் இந்த படத்திற்காக 100 அடி நீள போஸ்டரை ஒட்டி கலக்கி வருகின்றனர். சிம்புவின் படம் ஒன்றுக்கு 100 அடி நீள போஸ்டர் ஒட்டுவது இதுவே முதல்முறை. மேலும் இந்த படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாம்

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் படம் ரொம்ப சுமாராக இருப்பதாகவும், இந்த பில்டப் எல்லாம் இன்னும் ஒருவாரம் கூட நீடிக்காது என்றும் கூறினாராம். இந்த படம் வெற்றி பெற்றால்தான் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவுள்ளதாக ஏற்கனவே இந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியிருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது


 


இதில் மேலும் படிக்கவும் :