Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சினிமாவுக்கு வந்ததை நினைத்து கண்கலங்கிய ஒல்லி நடிகர்


Cauveri Manickam| Last Updated: சனி, 13 மே 2017 (17:31 IST)
சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டதை நினைத்து கண்கலங்கினாராம் ஒல்லி நடிகர்.

 

 
2002ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோவாக ஒல்லி நடிகர் அறிமுகமானபோது, ‘இவனெல்லாம் நடிகனா?’ என்று மட்டம் தட்டிப் பேசியவர்கள் ஏகப்பட்ட பேர். அடுத்தடுத்த படங்களிலும் இந்த ஏச்சுகள் தொடர, அவை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, ‘பேட்டை’ படத்தில் தான் யாரென்று நிரூபித்துக் காட்டினார். அதன்பிறகு அவருடைய கிராஃப் ஏறிக்கொண்டே இருக்கிறது.
 
நடிகர் மட்டுமின்றி, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்து, தன்னை மட்டம் தட்டியவர்களின் மூஞ்சில் கரியைப் பூசியிருக்கிறார் ஒல்லி நடிகர். அவர் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், குடும்பத்தினர், ரசிகர்களுக்கு நன்றி சொல்லி, ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கிறார் ஒல்லி நடிகர்.


இதில் மேலும் படிக்கவும் :