1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Modified: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (19:31 IST)

வாய்ப்புகளை கைப்பற்ற பிரபல நடிகை அதிரடி முடிவு!

அதிர்ஷ்ட காத்து எப்படி, யார்க்கும் எப்படி வேணும்னாலும் அடிக்கும். அந்த வகையில  கடவுள் பெயரை குறிப்பிட்ட மாதிரியான படத்துல இப்ப  நடிச்சுக்கிட்டு இருக்கிற பிரபலமான  நடிகைக்கு முன்னாடி நிறைய பட  வாய்ப்புகள் குவிஞ்சுச்சு. இடையில ஒல்லி நடிகரோட ரயில் படம் ஓடாததால ரொம்பவே அப்செட் ஆனாங்க. ஆனா அதுக்கு அப்புறம் டாப் நடிகர்களோட படத்துல நடிச்சதால பேமஸ் ஆனாஙக.



இப்ப கைவசம் ரெண்டு படத்துல நடிச்சிட்டு இருக்காங்க. ரெண்டுமே சூப்பரான படம் தாங்க. ஆனா அதுக்கப்புறம் எந்த பெரிய நடிகர்களாட படத்துலயும் நடிக்க அவங்க இன்னும் கமிட் ஆகல. இப்ப வந்த புது புது நடிகைகள் எல்லாம் டாப் லெவெலில் போய்க்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் தாரா நடிகையும், திருமணம் ஆன நடிகையும் பல வாய்ப்புகள கைப்பற்றிட்டாங்க.  அதனால இருக்கிற இடத்தை தக்க வச்சுக்குறதுக்கு அந்த கீர்த்தனமான நடிகை, கவர்ச்சி கோதாவுல இறங்க வாய்ப்பு இருக்கிறதா கோலிவுட்ல சொல்றாங்க.