செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By siva
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (08:19 IST)

’பார்ட்டி’யால் வெங்கட்பிரபு நட்பில் ஏற்பட்ட விரிசல்? கோலிவுட்டில் பரபரப்பு

கோலிவுட்டில் உள்ள நெருக்கமான நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சுப்பு பஞ்சு. இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது மட்டுமன்றி வெங்கட்பிரபுவின் மேனேஜரும் இவர்தான் என்பதும் வெங்கட்பிரபுவின் கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இவருக்கும் ஒரு கேரக்டர் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக வெங்கட் பிரபு மற்றும் சுப்பு பஞ்சு ஆகிய இருவரும் நட்பாக இருந்த நிலையில் திடீரென இந்த நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணம் ’பார்ட்டி’ திரைப்படம்தான் 
 
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவை வெங்கட்பிரபுவுக்கு அறிமுகப்படுத்தியது சுப்பு பஞ்சு தான் என்றும் ஆனால் இந்த படம் தற்போது முடிவடைந்து நான்கு வருடங்களாகியும் ஒரு சில சிக்கல்கள் காரணமாக வெளிவராமல் இருப்பதாகவும், நண்பர் சுப்பு பஞ்சு நான் இவ்வாறு சிக்கலில் தன்னை மாட்டி விட்டதாக வெங்கட்பிரபு கருதுவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது
 
இந்த திரைப்படம் பல காரணங்களால் வெளிவராமல் இருந்தாலும் இந்த தரப்படும் திரைப்படம் வெளியாகாமல் இருப்பதற்கு சுப்பு பஞ்சுவும்ம் ஒரு காரணம் என்று வெங்கட் பிரபு கருதுவதாகவும் இதனால் அவர்களுடைய நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய சுப்புபஞ்சு தீவிர முயற்சி செய்து வருவதாகவும் விரைவில் விரிசல் அடைந்த நட்பு மீண்டும் கூடும் என்றும் கூறப்படுகிறது