'விவேகம்' படத்தின் கதை விஜய்க்கு தெரிந்தது எப்படி? திடுக் தகவல்


sivalingam| Last Modified செவ்வாய், 11 ஜூலை 2017 (23:17 IST)
தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் கதை இன்னும் படக்குழுவில் இருக்கும் பலருக்கே தெரியாதாம். ஆனால் விஜய்க்கு இந்த படத்தின் கிட்டத்தட்ட மொத்த கதையும் தெரிந்துவிட்டதாக கிசுகிசு கிளம்பியுள்ளது.


 
 
இதற்கு காரணம் 'விவேகம்' படத்தில் நடித்த ஒரு நடிகை தற்போது விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்திலும் நடிக்கின்றாரம். அவர் விஜய்யுடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக 'விவேகம்' படத்தின் கதையை முழுவதும் கூறிவிட்டாராம். 
 
இதனால் அந்த நடிகையின் மீது 'விவேகம்' படக்குழுவினர் கடும் ஆத்திரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இந்த விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாமல் அந்த நடிகையை அஜித் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :