பிரமாண்ட பட நடிகருக்கும் நடிகைக்கும் இடையே காதல்....


Murugan| Last Modified ஞாயிறு, 28 மே 2017 (10:13 IST)
சமீபத்தில் வெளியான பிரம்மாண்ட படம் வசூலில் இந்திய அளவில் சக்கை போடு போடுகிறது. இதுவரை அப்படம் ரூ.1500 கோடிக்கும்  மேல் வசூலித்துள்ளது.

 

 
அந்த படத்தில் மகிழ்மதி இளவரசன் நடிகருக்கும், தேவசேன நடிகைக்கும் இடையே ஆன கெமிஸ்ட்ரி அனைவராலும் ரசிக்கப்பட்டது. இருவருக்குமே இதுவரை திருமணம் ஆகவில்லை என்பதால், நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இணைய வேண்டும் என ஆந்திர ரசிகர்கள் ஆசைப்பட்டனர்.
 
எனவே, தெலுங்கு ஊடகங்கள் அவர்களை பல்வேறு கிசுகிசுக்களை எழுதி வருகிறது. முதலில் அவர்கள் இருவருக்கும் தனித்தனி காதல் கதைகள் இருப்பதாக எழுதிய ஊடகங்கள், தற்போது அவர்கள் இருவரையும் இணைத்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
 
இதில் உண்மை என்னவென்றால், அவர்கள் இருவருக்கும் இடையேயும் உண்மையிலேயே காதல் பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. எனவேதான், ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு அந்த நடிகரும், நடிகையும் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்காமல் மௌனம் கடைபிடித்து வருகிறார்கள். அந்த நடிகரின் அடுத்த படத்திலும், தேவசேன நடிகையே நடிக்க இருக்கிறார் எனக்கூறப்படுகிறது. 
 
எனவே, காதல் முற்றிப்போன அவர்கள் உண்மையை ஒப்புக்கொள்வார்கள் எனத் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :