வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (11:03 IST)

கொஞ்சம் குறும்பு நிறைய காதல்... மனைவியுடன் ரொமான்டிக் மூடில் ஹரிஷ் கல்யாண்!

மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!
 
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
 
அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். மேலும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. 
 
இதனிடையே நர்மதா உதயகுமார் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தற்போது இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு கொஞ்சம் குறும்பு நிறைய காதல் என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.