வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 17 ஜூலை 2014 (11:33 IST)

உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை புண்ணாக்குறாங்களோ

அடுத்த உச்ச நடிகர் யார் என அவரது பட்டத்துக்கு போட்டி வைத்து சேனாதிபதிதான் அடுத்த உச்சம் என்று அறிவித்தது ஒரு பத்திரிகை.
 
அது சர்ச்சையாகி பத்திரிகை எதிர்பார்த்தது போலவே அதன் சர்குலேஷன் அதிகரித்தது. கையில் கிடைத்த தங்க முட்டையிடும் வாத்தை அவ்வளவு சீக்கிரம் அறுக்க பத்திரிகைக்கு மனமில்லை.
 
வரும் சுதந்திரத் தினத்தன்று மதுரையில் சேனாதிபதிக்கு வருங்கால உச்சம் என்று பட்டம் தர தயாராகி வருகிறதாம் பத்திரிகை. கண்டிப்பாக இது சர்ச்சையை ஏற்படுத்தும். ஏற்கனவே சேனாதிபதியின் மீது உச்சத்தின் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் மதுரை விழாவில் கலந்து கொண்டு அடுத்த உச்சமாக கிரீடம் சூட்டிக் கொள்வாரா? 
 
உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை புண்ணாக்குறாங்க.