வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 11 ஜூலை 2014 (11:08 IST)

இன்விடேஷன் விவகாரம் - இடித்துரைத்த நடிகர்

பால் நடிகை அன்எம்ப்ளாயி படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்டார். உடன் கலந்து கொண்டவர்களில் விவேகமான நகைச்சுவை நடிகரும் ஒருவர். அவர் பேசும் போது ஷுட்டிங்கில் அழைப்பிதழ் தந்தாங்க. நேரமில்லை, அடுத்த பங்ஷனில் கலந்துக்கிறேன்னு சொல்ல முடியாதில்லையா என்று கலாய்க்கிற தொனியில் பேச விஷயம் என்னவென்று அனைவருக்கும் புரிய, சம்பந்தப்பட்ட நடிகை மட்டும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். 
 
விஷயம் இதுதான்.
 
விவேக நடிகருக்கு தனது திருமண அழைப்பிதழை அவரது வீட்டில் சென்று தராமல் ஷுட்டிங் ஸ்பாட்டில் தந்துள்ளார் நடிகை. சீனியர் நடிகர் ஒருவருக்கு இப்படி வழியில் தருவது கூடாது என்பது அவருக்கு தெரியவில்லை. அதைதான் பிரஸ்மீட்டில் இடித்துரைத்தார் நடிகர். நகைச்சுவை நடிகர் என்பதால் நகைச்சுவை போலவே அவர் சொல்ல வந்திருந்தவர்களும் அப்படியே எடுத்துக் கொள்ள ஒரு சர்ச்சை தவிர்க்கப்பட்டது.