செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (15:33 IST)

அக்கட தேசத்துக்கே திரும்பிய ‘தல’ மச்சினி

மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்கள் காலை வாரிவிட்டதால், மறுபடியும் அக்கட தேசத்துக்கே திரும்பியிருக்கிறார் தல மச்சினிச்சி.
 


 

குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் நடித்தவர் இவர். தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள அரசின் ‘சிறந்த குழந்தை நட்சத்திரம்’ விருது வென்றதோடு, இந்திய அரசின் தேசிய விருதையும் வென்றவர்.

ஹீரோயினாக தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் சரியாகப் போகவில்லை. சில வருடங்கள் இடைவெளிவிட்டு ஒரு மலையாளப் படத்திலும், ஒரு தமிழ்ப் படத்திலும் நடித்தார். அந்தப் படங்களும் ஊத்திக்கொள்ள, மறுபடியும் அக்கட தேசத்துக்கே திரும்பியிருக்கிறார். கவர்ச்சி காண்பித்தாவது மார்க்கெட்டைப் பிடித்துவிட திட்டமாம்.