நம்பர் நடிகையைச் சுற்றிலும் குண்டர்கள்?

cauveri manickam| Last Modified திங்கள், 12 ஜூன் 2017 (18:01 IST)
பெரிய நம்பர் நடிகை எங்கு சென்றாலும், அவரைச் சுற்றி குண்டர்களும் செல்வதாக கூறப்படுகிறது.13 வருடங்களுக்கும் மேலாக, ஹீரோயினாகவே ஃபீல்டில் நிலைத்து நிற்கிறார் பெரிய நம்பர் நடிகை. இருந்தாலும், அவ்வப்போது குழந்தைக்கு அம்மா, ஹீரோவுக்கு அக்கா என்றெல்லாம் நடித்து கெரியரில் இடைவெளி விழாமல் பார்த்துக் கொள்கிறார்.

இவர் நடித்து கடைசியாக வெளியான படம் ஓடவில்லை என்றாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்டும் பந்தாவுக்கு மட்டும் குறைச்சல் இல்லையாம். அவர் இருக்கும்போது யூனிட்டே கிளாஸ் ரூம் மாதிரி அமைதியாக இருக்க வேண்டுமாம். யாராவது சத்தமாகப் பேசிவிட்டால் போதும். அவரைப் பார்வையாலேயே எரித்துவிடுகிறாராம்.

இதைவிடக் கொடுமை, கேரவனில் இருந்து இறங்கி கேமரா முன்னாடி நிற்கும் அந்த சில நொடிகள் கூட, குண்டர்கள் புடைசூழ பாதுகாப்புடன் தான் வருகிறாராம். ஏன் இந்த வெட்டி பந்தா? என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர் யூனிட்டில் இருப்பவர்கள். ஒருவேளை, இதெல்லாம் காதலரின் ஏற்பாடா இருக்குமோ?

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :