1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Suresh
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (11:51 IST)

புலி பிரிச்சு மேய்ஞ்ச தலைப்பாச்சே...

தல நடிகரின் படம் முடியப்போகும் தருணத்தில் பெயரை அறிவித்தனர். அதன் சில தினங்களிலேயே தளபதியின் டைகர் வெளியானது.
 
அந்தப் படத்தில் வரும் வில்லனின் கோட்டையும், கொத்தடிமைகளும் எல்லாம் தல படத்தின் பெயரையே கொண்டிருந்தார்கள். தளபதியும் ஒருகட்டத்தில் அந்தப் பெயரையே தனது பெயராக படத்தில் சொல்வார்.
 
இப்படி எதிரணி பிரித்து மேய்ந்த பெயரை தனது படத்துக்கு வைக்க வேண்டுமா என்று யோசிக்கிறாராம் தல. படப்பிடிப்பு நடத்தியதைவிட அதிக நாள் செலவளித்து பிடித்த தலைப்பாயிற்றே...
 
இனியொரு பெயர் கிடைக்க எத்தனை மாதங்களாகுமோ என்ற பயத்தில் தயாரிப்பாளரும், இயக்குனரும் இது நல்லாயிருக்கு இதையே வச்சுக்கலாம் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.
 
வேதாளம் எப்போது வேண்டுமானாலும் முருங்கைமரம் தாவலாம்.