கூட இருந்தே குழி பறித்த உதவியாளரை விரட்டி அடித்த அனுஷ்கா


sivalingam| Last Modified செவ்வாய், 16 மே 2017 (06:02 IST)
திரையுலகில் ஜொலித்த ஜோடிகள் நிஜவாழ்விலும் இணைவது சாதாரணமான ஒன்றுதான். அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா உள்பட பலர் இதற்கு உதாரணமாக கூறலாம்

 


இந்த நிலையில் உலகம் முழுவதும் சாதனை படைத்த 'பாகுபலி 2' படத்தின் உன்னத ஜோடிகளான பிரபாஸ்-அனுஷ்கா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தன.

இந்த வதந்திக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க அனுஷ்கா ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடியதாகவும், அவர்களது விசாரணையில் இந்த வதந்திக்கு அனுஷ்காவின் உதவியாளர் தான் காரணம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த உதவியாளரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய அனுஷ்கா, உடனே வேலையில் இருந்தும் தூக்கிவிட்டாராம்.

தற்போது பிரபாஸ் வீட்டில் தனியாகவும், அனுஷ்கா வீட்டில் தனியாகவும் திருமணத்திற்கு வரன் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :