Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதி நவீன ஒயர்லெஸ் சார்ஜர் செல்போன்: அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்


Suresh| Last Updated: திங்கள், 15 பிப்ரவரி 2016 (17:51 IST)
அதி நவீன ஒயர்லெஸ் சார்ஜர் செல்போனை அறிமுகம் செய்கிறது ஆப்பிள் நிறுவனம்.

 

 
தொழில் நுட்பம் நாளுக்கு நாள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்கின்றது. மனிதர்கள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஏராளமான சாதனைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
 
அந்த வகையில், ஏற்கெனவே ஒயர்லெஸ் சார்ஜர்கள் இருப்பது நாமறிந்ததே. அதன்படி செல்போனுக்கு சார்ஜ் செய்ய "சார்ஜ் மேட்" பன்படுத்தப்படுகின்றது.
 
இந்நிலையில், இதைவிட அதி அதி நவீன வசதிகளுடன் கூடிய ஒயர்லெஸ் சார்ஜர் செல்போன் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
 
இது முன்பிருந்ததைவிட அதிக தூரத்திற்கு ஒயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், தற்போது சார்ஜிங் மேட்டை (Charging mat) பயன் படுத்தித்தான் சார்ஜ் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
 
ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டு முறையில் இந்த சார்ஜ் மேட்டைப் பயன்படுத்தாமலேயே சார்ஜ் செய்ய முடியும்.
 
அதன்படி, துணை சாதனங்கள் எதுவும் இன்றி சார்ஜ் செய்ய முடியும். இந்த அதிநவீன முறையைக் கொண்டதாக ஆப்பில் ஐ போன் 7, மற்றும் ஆப்பில் ஐபோன் 7 எஸ் ஆகியவ மாடல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
 
இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவருவதாகவும், அவர்கள் எதிர்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. 
 
இந்த செல்போன்கள் 2017 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :