Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜூன் 30 முதல் வாட்ஸ் அப் செயல்படாது


Abimukatheesh| Last Updated: திங்கள், 5 ஜூன் 2017 (19:15 IST)
ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் குறிப்பிட்ட சில மொபைல் போன்களில் செயல்படாது என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 


 
தினசரி அனைவராலும் பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளமான வாட்ஸ் அப் ஜூன் 30ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில மொபைல் போன்களில் செயல்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பழைய மாடல் மொபைல் போன்கள் மற்றும் குறிப்பிட்ட சில ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்ட மொபைல் போன்கள் போன்றவற்றில் வாட்ஸ் அப் செயல்படாது.
 
அந்த மொபைல் போனின் மாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
 
பிளாக் பெர்ரி 10
நோக்கியா S40
நோக்கியா Symbian S60,
ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2
விண்டோஸ் 7.1 மொபைல்
ஐபோன் 3 3GS/iOS 6
 
மேலே குறிப்பிட்டுள்ள மாடல்கள் கொண்ட மொபைல் போன்களில் வாட்ஸ் அப் சேவை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பை அதிகரிக்க வாட்ஸ் அப் புதிய அப்டேட்டுடன் செயல்பட்டு வருவதால், பழைய இயங்குதளம் கொண்ட மொபைல் போன்களில் வாட்ஸ் அப் சேவை அளிக்க முடியாது என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :