வாட்ஸ் ஆப் நிறுவனம், மீண்டும் பழைய எழுத்து மூலமான ஸ்டேட்டஸ் வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம் வாட்ஸ் ஆப் நிறுவனம், புதிய சேவையை அறிமுகம் செய்தது. வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர், எழுத்து மூலமாகப் பதிவு செய்யும் ஸ்டேட்டஸ் முறையை மாற்றி, வீடியோ, ஃபோட்டோ போன்ற சில மணித்துளிக் காட்சித் தொகுப்பு ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டது.
இந்த ஸ்டேட்டஸ் நாள்தோறும் அழிந்துவிடும் என்றும், புதியதாக மீண்டும் மீண்டும் ஸ்டேட்டஸ் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வீடியோ ஸ்டேட்டஸ் முறைக்குப் பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, மீண்டும் பழைய எழுத்து முறையிலான ஸ்டேட்டஸ் வசதியை மறு அறிமுகம் செய்ய வாட்ஸ் முன்வந்துள்ளது. விரைவில், இந்த வசதி கொண்டுவரப்படும் என்றும், அதேசமயம், புது ஸ்டேட்டஸ் முறையும் தொடரும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.