வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (10:19 IST)

ஒரே வாட்ஸப்பில் ரெண்டு அக்கவுண்ட்.. ஈஸி பேக்கப் வசதி..! – வாட்ஸப் வெளியிட்ட அசத்தல் அப்டேட்ஸ்!

WhatsApp
உலகம் முழுவதும் மக்களால் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸப் தேவைக்கு ஏற்ப பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரே செயலியில் இரண்டு வாட்ஸப் கணக்குகளை பயன்படுத்துவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.



பலரும் இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தும் நிலையில் வாட்ஸப் கணக்குகளிலும் தனிநபர் கணக்கு, தொழில்ரீதியான தொடர்புகளுக்கான தனிக் கணக்கு என இரண்டு அக்கவுண்ட்களை பயன்படுத்தி வருகின்றனர். இரண்டு அக்கவுண்டையும் ஒரே செயலியில் பயன்படுத்த வாட்ஸப்பில் settings > Account > Add Account என்ற வசதிக்குள் சென்றால் கூடுதலாக ஒரு அக்கவுண்டை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

அதுபோல முன்பு புதிய ஸ்மார்ட்போனுக்கு வாட்ஸப் சாட்களை மாற்ற அடிக்கடி வாட்ஸப்பை பேக்கப் செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் தற்போது வாட்ஸப்பில் வழங்கப்பட்டுள்ள Tranfer Chats சென்றால் அதில் காட்டும் க்யூ ஆர் கோட் ஸ்கேன்னர் மூலம் புதிய ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்து அனைத்து வாட்ஸப் சாட்களையும் அப்படியே புதிய ஸ்மார்ட்போனிற்கு மாற்றிக் கொள்ள முடியும்.

மெட்டாவின் பேஸ்புக்கில் உள்ள அவதார் உருவாக்கிக் கொள்ளும் வசதியும் வாட்ஸப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K