Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜியோ தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க நம்பிக்கை அளிக்கும் ஆய்வு!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (18:00 IST)
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்தது. 

 
 
இந்த அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட பலர் ஜியோ சேவையை பயன்படுத்தத் துவங்கினர். ஆனால் ஜியோ சேவையில் வாய்ஸ் கால்களில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்தக் குளறுபடிகளை சரிசெய்யது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொண்டது.
 
வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜியோ தனது வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்போவதாக அறிவித்தது. இதனால் ஜியோவை பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள் என்று பேசப்பட்டது.
 
இந்நிலையில், ’பெர்ன்ஸ்டெயின்’ என்ற ஆய்வு நிறுவனம் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டது.
 
இந்த ஆய்வில் ஜியோ முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து 1,000 வாடிக்கையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 67 சதவிகிதத்தினர் ஜியோ சேவையை இரண்டாம் தேர்வாக பயன்படுத்தி வருவதாகவும், இதில் 63 சதவிகிதத்தினர் ஜியோ சேவையை முதன்மை தேர்வாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 
 
28 சதவிகிதத்தினர் தொடர்ந்து ஜியோ சேவையை இரண்டாம் தேர்வாகவே பயன்படுத்தப் போவதாகவும் மீதமுள்ள 2 சதவிகிதத்தினர் ஜியோ சேவையைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :