Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்மார்ட்போனை அழிக்க வருகிறதா ஆக்மெண்ட்டெட்: அடுத்த தலைமுறையின் தொழில்நுட்பம்


sivalingam| Last Modified செவ்வாய், 27 ஜூன் 2017 (05:01 IST)
இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை எனலாம். ஸ்மார்ட்போன் இல்லையென்றால் எந்த காரியமும் நடக்காது என்ற நிலைமை கிட்டத்தட்ட வந்துவிட்டது. கம்ப்யூட்டர், தொலைபேசி, கேமிரா, டிவி, ரேடியோ என வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களும் கையடக்க ஸ்மார்ட்போனில் இருப்பதால் ஸ்மார்ட்ப்போனுக்கு அழிவே இல்லை என்றுதான் அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றோம்.


 


ஆனால் பேஜரை ஸ்மார்ட்போன் அழித்தது போல், ஸ்மார்ட்போனை ஆக்மெண்ட்டெட் என்ற தொழில்நுட்பம் அழிக்க வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் மட்டும் அறிமுகமாகிவிட்டால் இப்போது நாம் ஸ்மார்ட்போனில் பார்ப்பது அனைத்தையும் எந்த உபகரணும் இல்லாமல் வெறும் கண்களால் அனைத்தையும் 3D தொழில்நுட்பத்தில் பார்க்கலாமாம்.

ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி மலிவான விலையில் கிடைக்கும் என்றும், இந்த தொழில்நுட்பம் மட்டும் வளர்ந்துவிட்டால், ஸ்மார்ட்போன் மட்டுமின்றி டிவி உள்பட திரை இருக்கும் அனைத்துப் பொருள்களும் தனது மதிப்பை இழக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே ஸ்மார்ட்போனுக்கும் ஒரு முடிவு உண்டு என்றே விஞ்ஞானிகள் அடித்து கூறுகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :