வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (14:31 IST)

ஸ்மார்ட்ஃபோன் வாங்கினால் Realme Buds T300 இலவசம்! அசத்தல் ஆஃபருடன் வெளியான Narzo 70 Pro 5G!

narzo 70 pro 5g
புதிதாக அறிமுகமாகியுள்ள Narzo 70 Pro 5G ஸ்மார்ட்ஃபோனுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் நிலையில் முன் பதிவு செய்பவர்களுக்கு Realme Buds T300 இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவின் 5ஜி ஸ்மார்ட்போன் போட்டியில் பட்ஜெட் விலையில் புதிதாக அறிமுகமாகிறது Narzo 70 Pro 5G. இதில் சிறப்பம்சமாக Segment 1st air gesture வசதி உள்ளது. இதன்மூலம் ஸ்மார்ட்போன் திரையை தொடாமலே ஸ்மார்ட்போனை காற்றில் கையை அசைத்து இயக்கவும், பயன்படுத்தவும் முடியும். இன்று மாலை 6 மணிக்கு Early Bird விற்பனை தொடங்கும் நிலையில் பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Narzo 70 Pro 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
  • 6.67 இன்ச் FHD+ டிஸ்ப்ளே
  • 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்
  • மீடியாடெக் டைமென்சிட்டி 7050 5G சிப்செட்
  • 2.6 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனமிக் ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • ஹைப்ரிட் மெமரி கார்ட் ஸ்லாட்
  • 50 MP + 8 MP + 2 MP ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா (4K வீடியோ ரெக்கார்டிங்)
  • 16 MP முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 67W SuperVOOC சார்ஜிங்
 
இந்த Narzo 70 Pro 5G ஸ்மார்ட்போன் Glass Green, Glass Gold ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ.19,999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ.21,999 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் Early Bird விற்பனையில் வாங்கினால் 128 ஜிபி மாடலுக்கு ரூ.1000 மற்றும் 256 ஜிபி மாடலுக்கு ரூ.2000 வரை சலுகை விலையில் பெறலாம். மேலும் இதனுடன் ரூ.2,299 மதிப்புள்ள புதிதாக அறிமுகமான Realme Buds T300 இலவசமாக கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K