திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (12:49 IST)

108 MP கேமரா, 5ஜி.. இந்த விலைக்கா? – ஓப்போ ரெனோ 8T சிறப்பம்சங்கள்!

Oppo Reno 8T
பிரபலமான ஓப்போ நிறுவனம் வெளியிட்டுள்ள ஓப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் கேமரா குவாலிட்டி ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிறுவனங்களில் ஓப்போ முக்கியமானது. முன்னதாக OPPO Reno 8 மாடல்களில் 50 எம்.பி ப்ரைமரி கேமரா இருந்த நிலையில், தற்போது புதிதாக வெளியாகியுள்ள OPPO Reno 8T 5G ஸ்மார்ட்போனில் 108 எம்.பி ப்ரைமரி கேமரா மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் பல உள்ளன

OPPO Reno 8T ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
 
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695, ஆக்டா கோர் ப்ராசசர்
  • 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 1080 x 2412 பிக்சல்ஸ்
  • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி (1டிபி வரை விரிவாக்க மெமரி வசதி)
  • 32 எம்.பி முன்பக்க வைட் ஆங்கிள் கேமரா
  • 108 எம்.பி வைட் ஆங்கிள் மெயின் கேமரா, 2 எம்.பி மைக்ரோலென்ஸ், 2 எம்.பி டெப்த் சென்சார்
  • 30FPS வீடியோ கவரேஜ் வசதி
  • ஆண்ட்ராய்டு 13, கலர் ஓஎஸ் 13,
  • 4800 mAh Battery, 67W SUPERVOOC சார்ஜிங்
  • டைப் சி, யூ எஸ் பி 2.0, 5ஜி,

இந்த OPPO Reno 8T ஸ்மார்ட்போன் ஷைமர் ப்ளாக் மற்றும் ஷைமர் கோல்டு ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.29,999. தற்போது ப்ரீ ஆர்டர்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் (பிப்ரவரி 10) நேரடி விற்பனைக்கு இந்த மாடல் வருகிறது.

Edit by Prasanth.K