ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 மே 2023 (10:58 IST)

அட்டகாசமான தரத்தில் OPPO Reno 10 Series ஸ்மார்ட்போன்கள்! – சிறப்பம்சங்கள் என்ன?

OPPO Reno 10 Pro
பிரபலமான ஓப்போ நிறுவனம் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய OPPO Reno 10 Series-ஐ ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

5ஜி தொழில்நுட்பம் பிரபலமடைந்துள்ள நிலையில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஓப்போ நிறுவனம் தனது புதிய OPPO Reno 10 Series ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சிரிஸில் OPPO Reno 10, OPPO Reno 10 Pro மற்றும் OPPO Reno 10 Pro Plus ஆகிய மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளன.

OPPO Reno 10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

OPPO Reno 10 Pro Plus

  • ஸ்னாப்ட்ராகன் 778G சிப்செட்
  • 6.7 இன்ச் 120Hz OLED டிஸ்ப்ளே,
  • 64+32+8 எம்.பி ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
  • 32 எம்.பி செல்பி கேமரா
  • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி
  • 4600 mAh பேட்டரி
  • 80W பாஸ்ட் சார்ஜிங்
 
OPPO Reno 10 Pro சிறப்பம்சங்கள்:


OPPO Reno 10 Series

  • டைமென்சிட்டி 8200 சிப்செட்
  • 6.74 இன்ச் 120Hz OLED டிஸ்ப்ளே
  • 50+32+8 எம்.பி ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
  • 32 எம்.பி செல்பி கேமரா
  • 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி
  • 4600 mAh பேட்டரி
  • 100W பாஸ்ட் சார்ஜிங்
 
OPPO Reno 10 Pro Plus சிறப்பம்சங்கள்:


OPPO Reno 10

  • ஸ்னாப்ட்ராகன் 8+Gen 1
  • 6.74 இன்ச் 120Hz OLED டிஸ்ப்ளே
  • 50+64+8 எம்.பி ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
  • 32 எம்.பி செல்பி கேமரா
  • 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி
  • 4700 mAh பேட்டரி
  • 100W பாஸ்ட் சார்ஜிங்
 
இந்த மூன்று மாடல் Reno 10 Series ஸ்மார்ட்போன்களும் தற்போது சீனாவில் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் நிர்ணயிக்கப்பட்ட்ட விலையை இந்தியா ரூபாயுடன் ஒப்பிடுகையில் OPPO Reno 10 மாடலின் விலை ரூ.29,299 ஆகவும், OPPO Reno 10 ப்ரோ மாடலின் விலை ரூ.40,990 ஆகவும், OPPO Reno 10 ப்ரோ ப்ளஸ்ஸின் விலை ரூ.45,990 ஆகவும் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

Edit by Prasanth.K