செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 17 ஜூன் 2017 (12:31 IST)

ஆப்லைனில் விற்பனைக்கு வந்த நோக்கியா!!

நோக்கியா 3 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் துவங்கியுள்ளது. ஆன்லைனில் துவங்கப்பட்ட விற்பனை தற்போது ஆப்லைன் சந்தைகளிலும் துவங்கியுள்ளது.


 
 
நோக்கியா விற்பனை மையங்கள் மற்றும் எச்எம்டி குளோபல் விற்பனை மையங்களில் நோக்கியா 3 ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
 
இதற்காக 400 பிரத்தியேக விற்பனையாளர்கள் மற்றும் 80,000 விற்பனை மையங்கள் இயங்குகின்றன. நோக்கியா 3 விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
சில்வர் வைட், மேட் பிளாக், டெம்ப்பர்டு ப்ளூ மற்றும் காப்பர் வைட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
 
நோக்கியா 6 அமேசானில் மட்டும் விற்பனை செய்யப்படும் நிலையில், நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஆஃப்லைன் கிடைக்கிறது.