1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 2 மே 2020 (11:46 IST)

ஊரடங்கில் ப்ளான் போட்டு வரும் ஜியோ மீட்! – ஜியோவின் புதிய செயலி!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் நிறுவனங்கள் கான்பரஸில் பணி புரியும் நிலையில் ஜியோமீட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளது ஜியோ நிறுவனம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணி புரிந்து வரும் நிலையில் விடியோ கான்பரண்ஸ் முறை அதிகரித்துள்ளது. இதனால் ஸூம், கூகிள் மீட், ஸ்கைப் போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்கள் பல கோடி பேரால் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஸூம் செயலி பாதுகாப்பானது அல்ல என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்நிலையில் மேலதிக வீடியோ கான்பரன்சிங் ஆப்சன்களுடன்ம் புதிதாக களம் இறங்குகிறது ஜியோவின் புதிய செயலியான ஜியோமீட். இலவசமாக கிடைக்கும் இந்த செயலியின் மூலம் ஒரே சமயத்தில் 5 பேர் வரை கான்பரன்சில் இணையலாம். இதில் பிஸினஸ் அக்கவுண்ட் துவங்கினால் ஒரே சமயத்தில் 100 பேர் வரை கான்பரன்சில் இணையலாம். ஜியோமீட் பயன்படுத்துபவர் உள்ள ஏரியாவின் நெட்வோர்க் வெகத்திற்கு ஏற்றார் போல வீடியோ தரத்தை மாற்றி கொள்ளும். மேலும் கான்பரன்சில் இருக்கும் போதே வேறு ஏதேனும் அழைப்பு வந்தாலும் பேசும் வசதியில் இதில் உள்ளது.