ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (11:21 IST)

ஒரு வருட ரீசார்ஜில் ரூ.5000 மதிப்புள்ள சலுகைகள்! – ஜியோ Independence day offer!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ரீசார்ஜ் ப்ளானை அறிமுகம் செய்துள்ளது.



இந்தியாவில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ இருந்து வருகிறது. விஷேச நாட்களில் சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.2,999க்கு ஒரு வருட ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது ஜியோ.

ஜியோ ரூ.2,999 ப்ரீபெய்டு திட்டத்தின் பயன்கள்:

இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஒரு வருட காலத்திற்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 2.5GB டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ளலாம். மேலும் ஜியோவின் ஜியோ க்ளவுட், ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற சேவைகளை கட்டணமின்றி பெறலாம்.

சிறப்பு சலுகைகள்:

ஸ்விகியில் ரூ.249 அல்லது அதற்கு மேல் ஆர்டர் செய்தார் ரூ.100 தள்ளுபடி
Yatraவில் விமான டிக்கெட் புக் செய்தார் ரூ.1,500 தள்ளுபடி மற்றும் உள்நாட்டில் ஹோட்டல் புக்கிங்கிற்கு ரூ.4,000 வரை தள்ளுபடி
AJIOவில் ரூ.999க்கு பொருட்கள் வாங்கினால் ரூ.200 வரை டிஸ்கவுண்ட். (குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும்)
ரூ.999+NMS சூப்பர் கேஷில் Netmedsல் பொருட்கள் வாங்கினால் 20% தள்ளுபடி
Reliance Digital தளத்தில் குறிப்பிட்ட ஆடியோ ஆசெசரிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி

Edit by Prasanth.K