வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2023 (16:35 IST)

கேம் பிரியர்களுக்காகவே.. அட்டகாசமான தரத்தில் iQOO Neo 7 Pro 5G!

iQOO Neo 7 Pro
ஐக்கூ நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் சிறப்பம்சங்களுடன் கூடிய iQOO Neo 7 Pro 5G வெளியாகியுள்ளது.



இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை வேகமெடுத்து வருகிறது. கேமிங், கேமரா, ப்ராஸசர் என பலவிதமான பயன்பாடுகளுக்கும் ஏற்ற சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது ஐக்கூவின் iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. கேமிங் பிரியர்களுக்காகவே Independent Gaming Chip தொழில்நுட்ப வசதி இதில் உள்ளது.

iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே,
  • 120 Hz ரெப்ரெஷ் ரேட்,
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8+ Gen 1 சிப்செட்
  • Independent Gaming Chip
  • 3.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 13
  • 8 ஜிபி/ 12 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ட்ரிபிள் OIS ப்ரைமரி கேமரா
  • 16 எம்பி முன்பக்க கேமரா
  • USB – C 2.0, IR Blaster
  • 5000 mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங்

iQOO Neo 7 Pro


இந்த iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போனின் மெமரி கார்டு ஸ்லாட் கிடையாது. FM Radio, 3.5 mm Headphone Jack உள்ளிட்டவையும் கிடையாது.

இந்த iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போன் டார்க் ஸ்டோர்ம், ஃபியர்லஸ் ஃப்ளேம் ஆகிய இரண்டு நிறங்களிலும் கிடைக்கிறது. iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.34,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.37,999 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

Edit by Prasanth.K