புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (10:46 IST)

இரண்டு வருட போராட்டத்துக்கு பின் ஆப்பிள் நிறுவனம் சாதனை!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகளவில் அதிகமாக விற்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஐபோன் முதலிடம் பிடித்துள்ளது.

உலகளவில் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்களின் விருப்பமான போனாக ஐபோன் இருந்தாலும் அதன் விலை மற்றும் சில வசதிக் குறைபாடுகளால் அதை அதிக அளவில் யாரும் வாங்குவதில்லை. ஆனாலும் உயர்தர வர்க்கத்தினருக்கு ஒரு கௌரவமாகவே ஐபோன் வைத்திருப்பது இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகளவில் அதிகமாக விற்கப்பட்ட போன்களில் ஐபோன் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கடுத்த இடங்களில் சாம்சங் மற்றும் ஹவாய் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

2019ம் ஆண்டின் 4ஆவது காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை வைத்து கவுண்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்தவிலை ஸ்மார்ட்போன்களால் இந்த விற்பனை அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.